/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராமப்புற மாணவர் கிரிக்கெட் போட்டி; 26 பள்ளிகளின் 390 வீரர்கள் அபாரம்
/
கிராமப்புற மாணவர் கிரிக்கெட் போட்டி; 26 பள்ளிகளின் 390 வீரர்கள் அபாரம்
கிராமப்புற மாணவர் கிரிக்கெட் போட்டி; 26 பள்ளிகளின் 390 வீரர்கள் அபாரம்
கிராமப்புற மாணவர் கிரிக்கெட் போட்டி; 26 பள்ளிகளின் 390 வீரர்கள் அபாரம்
ADDED : அக் 06, 2025 12:17 AM

கோவை; கோவை மாவட்ட 'ஸ்போர்ட்ஸ் அண்ட் கேம்ஸ்' நலச்சங்கம் சார்பில் கிராமப்புற மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி அக்., 2ம் தேதி, சரவணம்பட்டி, டி.கே.எஸ்., மெட்ரிக் பள்ளி மைதானத்தில் நடந்தது. 'கதிரவன் எழுந்து மறையும் வரை' என்ற பெயரில் நடந்த இப்போட்டியில், 26 பள்ளிகளின் அணிகள் பங்கேற்றன.
நீலாம்பூர், மேட்டுப்பாளையம், எட்டிமடை, கரட்டுமேடு, சத்தி ரோடு, கோவில்பாளையம், குருடம்பாளையம், கோட்டைபாளையம், வட்டமலைபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 14 மற்றும், 16 வயதுக்குட்பட்ட மாணவர்கள், 390 பேர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
பல்வேறு போட்டிகளை அடுத்து, 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான இறுதிப்போட்டியில், கே.வி. மெட்ரிக் பள்ளி அணியும், மேட்டுப்பாளையம் மகாஜன பள்ளி அணியும் மோதின. பேட்டிங் செய்த மகாஜன பள்ளி அணியினர் ஐந்து ஓவரில் இரு விக்கெட் இழப்புக்கு, 30 ரன் எடுத்தனர்.
அடுத்து விளையாடிய கே.வி. பள்ளி அணியினர் மூன்று ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு, 31 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். கே.வி. அணி வீரர் பிரிதீவன், 10 பந்தில், 24 ரன் விளாசி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில், கோவை வித்யாஷ்ரம் பள்ளியும், சரவணம்பட்டி ரூபி மெட்ரிக் பள்ளி அணியும் மோதின. பேட்டிங் செய்த ரூபி பள்ளி அணியினர் ஐந்து ஓவரில் ஏழு விக்கெட் இழப்புக்கு, 22 ரன் எடுத்தனர்.
அடுத்து விளையாடிய கோவை வித்யாஷ்ரம் அணியினர் ஐந்து ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு, 24 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். வீரர் பிரகாஷ் எட்டு பந்துகளில், 18 ரன் எடுத்தார். வெற்றி பெற்ற அணிகளுக்கு டிராபிகள், 96 பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சங்க செயலாளர் சண்முகசுந்தரம், திட்ட சேர்மன் ரமேஷ்குமார், ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.