/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஹிந்துஸ்தான் கல்லுாரியில் ரஷ்ய கலைஞர்கள் 'பாலே'
/
ஹிந்துஸ்தான் கல்லுாரியில் ரஷ்ய கலைஞர்கள் 'பாலே'
ADDED : ஜன 28, 2025 11:52 PM

போத்தனூர்: கோவை ஹிந்துஸ்தான் இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், ரஷ்ய கலைஞர்களின் நடன நிகழ்ச்சி நடந்தது.
ரஷ்யாவிலிருந்து கலாசார பரிமாற்ற அடிப்படையில், நடன கலைஞர்கள் இந்தியா வந்துள்ளனர். அவர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும், நடன நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.
நேற்று ஒத்தக்கால்மண்டபத்திலுள்ள, ஹிந்துஸ்தான் இன்ஜி.. மற்றும் தொழில்நுட்ப கல்லூரிக்கு வருகை தந்தனர்.
அப்போது தங்கள் நாட்டின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் விதமாக பாலே, நாட்டுப்புற நடனம், ஜிப்ஸி, அக்ரோபேட் உள்ளிட்ட நடனங்களை ஆடி பிரமிக்க வைத்தனர்.
இறுதியாக, தங்கள் நாட்டு கொடியுடன் நடனமாடி, நமது நாட்டின் தேசிய கொடியுடன் அணிவகுத்தது அனைவரையும் சிலிர்க்க வைத்தனர்.
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.