ADDED : மார் 01, 2026 06:37 AM

அ நிறம் | அளவு
கோவை: சூலுார் ஆர்.வி.எஸ். கலை அறிவியல் கல்லுாரியில், 'இபோனி 26' என்ற கலைத் திருவிழா நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட பின்னணி பாடகர் நரேஷ் ஐயர், அபர்ணா, ஸ்ரீ நிஷா ஆகியோர் பங்கேற்றனர்.
மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், சுமார் இரண்டு மணி நேரம் பல்வேறு வகையான திரைப்பட பாடல்களை பாடி அசத்தினர். ஒவ்வொரு மாணவர்களும் தங்கள் தனித்திறனை காட்டும் வகையில் பாடல், நடனம் என பல்வேறு கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். பேராசிரியர்கள், மாணவர்கள் உற்சாகமாக கண்டு மகிழ்ந்தனர்.
கல்வி குழுமங்களின் அறங்காவலர் செந்தில் கணேஷ், தாளாளர் வித்யாலட்சுமி, கல்லுாரிச் செயலர் சாரம்மாள், முதல்வர் சிவக்குமார், துணை முதல்வர் அய்யப்பதாஸ், இயக்குனர் விவேகானந்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
