/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ் பெண்டு - கொடிசியா வரை ரோடு முழுவதும் பள்ளம்
/
எஸ் பெண்டு - கொடிசியா வரை ரோடு முழுவதும் பள்ளம்
ADDED : டிச 08, 2025 06:16 AM

பீளமேடு: தண்ணீர் பந்தல் பகுதியில் ரயில்வே மேம்பாலம் பணி நடந்து வருவதால், வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
சத்தி ரோடு, கணபதி, சேரன் மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 'எஸ் பெண்டு' கடந்து, தண்ணீர் பந்தல் வழியாக அவிநாசி ரோடு சென்றவர்கள், கீதாஞ்சலி ஸ்கூல் வழியாக கொடிசியா சென்றடைந்து, அங்கிருந்து அவிநாசி ரோடு பயணிக்கின்றனர்.
'எஸ் பெண்டு' பகுதியில் இருந்து கொடிசியா வரை, ரோட்டில் குழி ஏற்பட்டுள்ளது. மெகா சைஸ் பள்ளங்களாக இருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய ரோட்டை, இன்னும் சீரமைக்காமல் இருப்பதால், அக்குழி நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது.
குழாய் பதித்த ஒரு பகுதியில், சரியாக மூடாமல் தார் ரோடு போட்ட இடத்தில், மண் இலகுதன்மை அடைந்து கீழிறங்கியிருக்கிறது. வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கின்றனர். சில தினங்களுக்கு முன் பைக்கில் சென்ற கல்லுாரி மாணவனும், மாணவியும் விபத்துக்கு உள்ளாகி உள்ளனர்.
சில மாதங்களுக்கு முன் கீதாஞ்சலி ஸ்கூல் அருகே, ஒருவர் உயிரிழந்தார். ஆனாலும், இந்த ரோட்டை சீரமைக்காமல் மாநகராட்சி அலட்சியமாக இருக்கிறது.
ரோட்டை சீரமைக்க தமிழக அரசு, ஒதுக்கும் கோடிக்கணக்கான நிதியை, மாநகராட்சி முறையாக செலவிட வேண்டும். ரோட்டை தரமாக போட வேண்டும்.
செம்மொழி பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக, மாநகராட்சி அதிகாரிகள் பலரும் எந்நேரமும் அங்கேயே முகாமிட்டுள்ளனர்.
பூங்கா உருவாக்குவது மட்டுமே மாநகராட்சியின் வேலையல்ல; அதை விட, மக்கள் பயன்படுத்தும் ரோடு முக்கியம் என்பதை, மாநகராட்சி நிர்வாகம் உணர்ந்தால் சரி.

