தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வளர்ச்சி தொடர தி.மு.க.வை ஆதரிக்க வேண்டுமென்கிறார் சபரி கார்த்திகேயன்

வளர்ச்சி தொடர தி.மு.க.வை ஆதரிக்க வேண்டுமென்கிறார் சபரி கார்த்திகேயன்

வளர்ச்சி தொடர தி.மு.க.வை ஆதரிக்க வேண்டுமென்கிறார் சபரி கார்த்திகேயன்


ADDED : ஏப் 20, 2026 07:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 20, 2026 07:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

போத்தனூர்: ''நாட்டின் முன்மாதிரி மாநிலமாக தமிழகத்தின் வளர்ச்சி தொடர தி.மு.க., வை ஆதரியுங்கள்,'' என சபரி கார்த்திகேயன் பேசினார்.

கோவை கிணத்துக்கடவு தொகுதி தி.மு.க., வேட்பாளர் சபரிகார்த்திகேயன் செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட அண்ணா நகர், கலைஞர் நகர், நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று ஓட்டு கேட்டார். முன்னதாக கட்சியின் இளைஞரணியினர், தன்னார்வலர்கள் இணைந்து வாகன ஊர்வலம் நடத்தினர்.

வேட்பாளர் சபரி கார்த்திகேயன் பேசியதாவது:

தி.மு.க., ஆட்சியின் சாதனைகள், மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் உங்களை வந்தடைந்தது. அதனால் சிறப்பான பயனடைந்துள்ளீர்கள் என்பதை உங்கள் வரவேற்பின் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.

என் மீதான அன்பு, நம்பிக்கையால் வரும் 23ம் தேதியன்று உங்கள் ஓட்டுகள் உதயசூரியனுக்கே என்பதை முடிவெடுத்து விட்டீர்கள். இருப்பினும் ஓட்டு கேட்டு வருவது எனது கடமை.

சட்டசபை தேர்தலில் உங்கள் ஆதரவுடன் வெற்றி பெற்று, நான் சட்டசபை செல்லும்போது அங்கே உங்களின் குரலாக ஒலிப்பேன். தொகுதியின் தேவைகளை கேட்டுப் பெறுவேன். திராவிட மாடல், 2.0 ஆட்சி அமையும்போது அரசின் பல்வேறு நலத்திட்டங்களும் உங்கள் கைகளுக்கு கொண்டு வந்து சேர்த்திடும் வகையில் பணியாற்றுவேன்.

நம் தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் தொடர, மேலும் பல சாதனைகளை புரிய உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்கள்.

மக்கள் உணர்வுகளை சரியாக புரிந்துகொண்டு இல்லத்தரசி திட்டம், மகளிர் உரிமைத்தொகை உயர்வு ஆகிய பல திட்டங்களை நாம் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். சொன்னதை செய்யும் அரசு உங்களுக்கான அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும்.

நம்பிக்கையோடு ஓட்டு போட்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டுமாய், அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இப்பகுதியில் பிரசாரத்திற்கான ஏற்பாடுகளை செய்த கழக நிர்வாகிகள், உடன்பிறப்புகள், கூட்டணி கட்சியினர் மற்றும் வாகன ஊர்வலத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us