/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போத்தனுார் வழியாக சபரிமலை சிறப்பு ரயில்
/
போத்தனுார் வழியாக சபரிமலை சிறப்பு ரயில்
ADDED : நவ 09, 2024 11:42 PM
கோவை: சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக, போத்தனூர் வழியாக சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் வடக்கு - பெங்களூரு ரயில் (எண்: 06083), வரும் 12ம் தேதி முதல், ஜன., 28ம் தேதி வரை செவ்வாய் தோறும் திருவனந்தபுரத்தில் இருந்து, மாலை 6:05 மணிக்குப் புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10:55 மணிக்கு பெங்களூருவை சென்றடையும்.
இந்த ரயில் புதன்கிழமைகளில், போத்தனுாரை நள்ளிரவு 1:58 மணிக்கும், திருப்பூரை அதிகாலை 3:15 மணிக்கும் வந்தடையும்.
மறு மார்க்கத்தில், வரும் 13ம் தேதி முதல் ஜன., 29 வரை, பெங்களூருவில் இருந்து மதியம் 12:45 மணிக்குப் புறப்படும் ரயில் (எண்:06084) அடுத்த நாள் காலை 6:45 திருவனந்தபுரத்தைச் சென்றடையும்.
இந்த ரயில் புதன்கிழமைகளில், திருப்பூரை மாலை 6:43 மணிக்கும் போத்தனூரை இரவு 8:15 மணிக்கும் வந்தடையும்.
கொல்லம், காயங்குளம், மாவேலிக்கரா, செங்கன்னுார், திருவல்லா, சங்கனாச்சேரி, கோட்டயம், ஏற்றுமானுார், எர்ணாகுளம், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனுார், திருப்பூர், ஈரோடு, சேலம், பங்காரப்பேட், கிருஷ்ணராஜபுரம் ஆகிய ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.
இத்தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.