/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசியக்கொடியேற்றிய சச்சிதானந்த ஸ்வாமிகள்
/
தேசியக்கொடியேற்றிய சச்சிதானந்த ஸ்வாமிகள்
ADDED : ஆக 15, 2025 09:11 PM

கோவை; ராம்நகர் ராமர் கோவில் சாலையிலுள்ள, சுவாமி விவேகானந்தா சேவா கேந்திரத்தில், சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள, ஸ்ரீ சக்ர மஹாமேரு பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மஹாஸ்வாமிகள், தேசியக்கொடியேற்றி மரியாதை செய்தார்.
அவருடன், விவேகானந்தா சேவா கேந்திர நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள். சுவாமிகளின் வேதபாடசாலையில் பயின்று வரும் சிறுவர்கள், தேசியக்கொடிக்கு மரியாதை செய்தனர்.
ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த சுவாமிகள் கூறுகையில், ''தேசியமும், தெய்வீகமும் சன்னியாசிகளாகிய எங்களை போன்றவர்களுக்கு ஒன்றுதான். தேசியத்தை நாங்கள் தெய்வீகம் என்ற, ஆன்மிக பாதையின் மூலம் வளர்த்து வருகிறோம்.
ஆன்மிகத்தேடல்களிலிருந்து தேசிய உணர்வை நாம் எளிதாக பெறலாம். இது சாஸ்திரங்களிலும், வேதங்களிலும் சொல்லப்பட்டுள்ளது.
அதனால் சன்னியாசிகளாகிய நாங்கள், சுதந்திர திருநாளில் எங்கிருக்கிறோமோ, அங்குள்ள பகுதிகளில் தேசியக்கொடியேற்றி மரியாதை செய்வது வழக்கம்,'' என்றார்.

