/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராமப்புற இளைஞர்களை ஊக்கப்படுத்தும் செயல்! வீரர்களுக்கான அங்கீகாரம் குறித்து சத்குரு பெருமிதம்
/
கிராமப்புற இளைஞர்களை ஊக்கப்படுத்தும் செயல்! வீரர்களுக்கான அங்கீகாரம் குறித்து சத்குரு பெருமிதம்
கிராமப்புற இளைஞர்களை ஊக்கப்படுத்தும் செயல்! வீரர்களுக்கான அங்கீகாரம் குறித்து சத்குரு பெருமிதம்
கிராமப்புற இளைஞர்களை ஊக்கப்படுத்தும் செயல்! வீரர்களுக்கான அங்கீகாரம் குறித்து சத்குரு பெருமிதம்
ADDED : அக் 23, 2025 11:35 PM

கோவை: 'ஈஷா கிராமோத்சவம் 2025' இறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளின் சிறந்த வீரர்கள், பிரைம் வாலிபால் லீக் போட்டிகளை நேரில் காண சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு உள்ளனர். இது, கிராமப்புற இளைஞர்களை ஊக்கப்படுத்தும் செயல் என, சத்குரு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஈஷா கிராமோத்சவம் இறுதிப் போட்டிகள், கடந்த மாதம் நடத்தப்பட்டன. ஆண்களுக்கான வாலிபால் போட்டியில், சேலம் உத்தமசோழபுரம் அணி, பெண்களுக்கான த்ரோபால் போட்டியில், கர்நாடகாவை சேர்ந்த படகணுரூ அணி முதலிடம் பிடித்தன.
சிறந்த வீரர்களாக, உத்தமசோழபுரம் அணியை சேர்ந்த மணிகண்டன், படகணுரூ அணியை சேர்ந்த ரேகா மற்றும் ஸ்வேதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், கிராமப்புற பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கிராமப்புற வீரர்களை அங்கீகரிக்கும் வகையில், ஐதராபாத்தில் நடந்த பிரைம் வாலிபால் போட்டிகளை நேரில் காண, அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டனர். பிரைம் வாலிபால் சார்பில், அவர்களுக்கான விமான டிக்கெட், நட்சத்திர விடுதியில் தங்கும் வசதி, சர்வதேச விளையாட்டு வீரர்களிடம் கலந்துரையாடும் வாய்ப்பு ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டது.
குறிப்பாக, ஈஷா கிராமோத்சவ வீரர்கள், சென்னை பிளிட்ஸ் அணி வீரர்களை சந்தித்து உரையாடினர். மேலும் அவர்களுக்கு போட்டித் தொடரில் பயன்படுத்தப்படும் வாலிபால் சிறப்பு பரிசாக வழங்கப்பட்டது. இதனுடன், ஈஷா கிராமோத்சவம் தொடர்பான அவர்களின் அனுபவ பகிர்வு, காணொளியும், போட்டி நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதுகுறித்த சத்குரு எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது:பாரதத்தின் கிராமப்புறங்களில் இருக்கும் இளைஞர்களின் சக்தி, ஏதாவது ஒரு விளையாட்டு வடிவத்தின் வாயிலாக மகிழ்ச்சியான வெளிப்பாட்டை காண வேண்டும்.
பிரைம் வாலிபால் போன்ற முக்கிய விளையாட்டு லீக்குகளின் அங்கீகாரம், மேலும் மேலும் கிராமப்புற இளைஞர்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிப்பதற்கான ஒரு முக்கியமான படியாகும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

