sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

14,000 பேர் பங்கேற்ற சத்குருவின் தியான நிகழ்ச்சி

/

14,000 பேர் பங்கேற்ற சத்குருவின் தியான நிகழ்ச்சி

14,000 பேர் பங்கேற்ற சத்குருவின் தியான நிகழ்ச்சி

14,000 பேர் பங்கேற்ற சத்குருவின் தியான நிகழ்ச்சி


UPDATED : மார் 20, 2025 12:05 PM

ADDED : மார் 20, 2025 11:58 AM

Google News

UPDATED : மார் 20, 2025 12:05 PM ADDED : மார் 20, 2025 11:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 64 நாடுகளில் இருந்து மக்கள் பங்கேற்பு

சத்குரு அவர்கள் வழிநடத்திய “Soak in the Ecstasy of Enlightenment” எனும் தியான நிகழ்ச்சி, புதுதில்லி அருகே துவாரகையில் அமைந்துள்ள யாசோபூமி எனும் பிரம்மாண்ட மாநாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் 64 நாடுகளில் இருந்து மொத்தம் 14,000 பேர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி சத்குருவின் வழிகாட்டுதலின் கீழ் ஆழமான தியான முறைகளை மேற்கொள்ளவும், மேம்பட்ட ஆன்மீக அனுபவத்தை பெறுவதற்கான வாய்ப்பையும் பங்கேற்பாளர்களுக்கு வழங்கியது. ஈஷாவில் வழங்கப்படும் அடிப்படை தியான வகுப்பான 'ஈஷா யோகப் பயிற்சியை' நிறைவு செய்தவர்கள் இந்த தியான நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான ஈஷா தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

Image 1394779


இந்த பிரத்யேக தியான நிகழ்ச்சி இந்தியாவில் முதன்முறையாக டெல்லியில் நடைபெற்று உள்ளது. இதற்கு முந்தைய நிகழ்ச்சி ஜனவரி 2024-இல் சிட்னியில் நடைபெற்றது. டெல்லிக்கு பின்னர் ஏப்ரல் 5 -ஆம் தேதி பெங்களூரிலும், மே 24- ஆம் தேதி டொராண்டோவிலும் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

முன்னதாக சத்குரு அவர்கள் வெளியிட்ட இலவச தியான செயலியான 'மிராக்கிள் ஆப் தி மைண்டு' அறிமுகமான 15 மணி நேரத்திலேயே 10 லட்சம் பதிவிறக்கங்களை கடந்து சாட் ஜி.பி.டியின் சாதனையை முந்தி உலகம் முழுவதும் பிரபலமாகியது. இந்த தியான செயலி தற்போது வரை 20 நாடுகளில், 5 மொழிகளில் கிடைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயக்கப்படுவது இச்செயலியின் மற்றொரு சிறப்பம்சம். தியானம் மட்டுமன்றி சத்குருவின் விரிவான ஞானத்தை, பார்வையை, வழிகாட்டுதல்களை இச்செயலி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us