ADDED : நவ 24, 2024 11:41 PM

மேட்டுப்பாளையம்; சத்ய சாய்பாபாவின், பிறந்த நாள் முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் பல்வேறு இடங்களில், விழாக்கள் நடந்தன.
மேட்டுப்பாளையம் அன்னபூரணி பேட்டை, கோ ஆப்ரேட்டிவ் காலனி ஆகிய இடங்களில், சத்ய சாய்பாபா சமிதிகள் உள்ளன. சத்ய சாய்பாபாவின், 99வது பிறந்த நாளை முன்னிட்டு, சமிதிகளில் ஓம்காரம், சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனம், கணபதி ஹோமம், கொடியேற்றம், புஷ்பாஞ்சலி, வஸ்திரதானம், நாராயண சேவை ஆகிய வைபவ நிகழ்ச்சிகள் நடந்தன.
காரமடை வித்ய விகாஸ் பள்ளியில் பஜனையும், ஆலாங்கொம்பு சத்ய சாய் பஜனை மண்டலத்தில் சிறப்பு பூஜையும் நடந்தது. மாலையில் சத்ய சாய் பாபா சுவாமி படத்துடன் ரத ஊர்வலம் நடந்தது.
இதில் பால விகாஸ் குழந்தைகள் மற்றும் சாய் அன்பர்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் பால விகாஸ் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அன்னபூரணி பேட்டை சமிதியில் இரவு, புட்டபர்த்தி பாடகர் சுப்பாராவின் பஜனை நடந்தது. மகா மங்கள ஆரத்தியுடன் வைபவ நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன. இவ்விழாக்களில் கந்தசாமி, கோபால், டாக்டர் தினேஷ் உட்பட அனைத்து சாய் அன்பர்களும், சாய்பாபாவின் பிறந்தநாள் விழா பூஜையில் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் கணேஷ் ,சாய் பிரசாத் ஆகியோர் செய்திருந்தனர்.