சாயிபாபா காலனி மேம்பாலம் :2 மாதத்துக்குள் முடிக்க இலக்கு
சாயிபாபா காலனி மேம்பாலம் :2 மாதத்துக்குள் முடிக்க இலக்கு
UPDATED : மே 09, 2026 09:23 PM
ADDED : மே 09, 2026 07:31 PM

கோவை: சாயிபாபா காலனியில் கங்கா மருத்துவமனை முன் துவங்கி, பஸ் ஸ்டாண்ட் வரை 1,140 மீட்டர் நீளத்துக்கு 4 வழி மேம்பாலம் கட்டப்படுகிறது.
2024 மார்ச் மாதம் 'ஒர்க் ஆர்டர்' வழங்கப்பட்டது. லோக்சபா தேர்தல் அறிவித்ததால், 2 மாதங்களுக்கு பின் துவங்கியது. ரூ.52.90 கோடி ஒதுக்கப்பட்டது. மார்ச் மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
துாண்கள் அமைக்க துளையிட்டபோது, பாதாள சாக்கடை குழாய் உடைந்தது. குடிநீர் குழாயும் உடைக்கப்பட்டது. மாநகராட்சி மூலமாக மாற்று வழி ஏற்படுத்தி, துாண்கள் எழுப்பப்பட்டன. உயரழுத்த மின்னழுத்த கம்பிகள் பாலத்துக்கு குறுக்கே சென்றதால், இரண்டு துாண்களுக்கு இடையே ஓடுதளம் அமைக்க முடியாத சூழல் உருவானது. மின்வாரியம் மூலமாக மின்கோபுரம் உயர்த்தப்பட்டது.
தற்சமயம் மருத்துவமனை முன்பகுதியில் 'ரேம்ப்' அமைக்கும் பணி முழுமையடைந்து, தார் சாலை போடப்பட்டு விட்டது. பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 'ரேம்ப்' அமைக்கப்படுகிறது. 'முதலில் வெள்ளை பெயின்ட் அடிக்கப்படும். என்ன கலர் பூசலாம் என முடிவானதும் பணி துவங்கும். 2 மாதத்துக்குள் வேலைகள் முடியும்' என்று அதிகாரிகள் கூறினர்.
