/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பருத்தி மீதான இறக்குமதி வரி ரத்து; பிரதமருக்கு நன்றி சொல்கிறது 'சைமா'
/
பருத்தி மீதான இறக்குமதி வரி ரத்து; பிரதமருக்கு நன்றி சொல்கிறது 'சைமா'
பருத்தி மீதான இறக்குமதி வரி ரத்து; பிரதமருக்கு நன்றி சொல்கிறது 'சைமா'
பருத்தி மீதான இறக்குமதி வரி ரத்து; பிரதமருக்கு நன்றி சொல்கிறது 'சைமா'
ADDED : ஆக 20, 2025 12:49 AM
கோவை; பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்தமைக்காக, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ள சைமா, வரும் 2030 வரை பருத்தி மகசூல் அல்லா காலங்களிலும், இந்த வரிவிலக்கைத் தொடர வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
சைமா தலைவர் சுந்தரராமன் அறிக்கை:
அனைத்து வகையான பஞ்சு மீதான இறக்குமதி வரி வரும் செப்., 30ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பரிந்துரை செய்த முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி.
பருத்தி விளைச்சல் அல்லாத காலங்களில் இறக்குமதி வரியை ரத்து செய்வது, விவசாயிகளுக்கும் தொழில்துறைக்கும் சமநிலை வாய்ப்பை உருவாக்கி, உலகளாவிய போட்டித்திறனை அடைய உதவும்.
பிரிட்டன் உடனான தாராள வர்த்தக ஒப்பந்தம், தற்போதைய வரி விலக்கு போன்றவை அதிக ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்கித் தரும். ஏற்றுமதி சந்தைகளில் நீண்டகால ஒப்பந்தங்களைப் பூர்த்தி செய்ய, பஞ்சு இறக்குமதி அவசியம்.
பருத்தி உற்பத்தி திட்டத்தின் கீழ், பஞ்சு தேவையில் தன்னிறைவு அடைய, 7 ஆண்டுகள் வரை தேவைப்படும். எனவே, 2030 வரை, பருத்தி மகசூல் இல்லாத ஏப்., 1 முதல் செப்., 30 வரையிலான காலகட்டத்துக்கு, ஆண்டுதோறும் வரிவிலக்கு அளிப்பது அவசியம்.
2030க்குள் இந்திய நூல் மற்றும் துணி ஏற்றுமதியை 37 பில்லியன் டாலரில் இருந்து, 100 பில்லியன் டாலராக அதிகரிக்க வேண்டும் என்ற இலக்கை எட்ட, சர்வதேச விலையில் தடையற்ற மூலப்பொருட்கள் கிடைப்பது அவசியம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.