ADDED : பிப் 06, 2026 05:03 AM
அ நிறம் | அளவு
வெள்ளக்கிணறு வெள்ளக்கிணறு பிரிவு சுப்பிரமணியம் பாளையம் அரசு ஐ.டி.ஐ. அருகே உள்ள எம்.கே.ஜி. லே- அவுட்டில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் - ஸ்ரீ சக்தி கருமாரியம்மன் கோயில் 8-ம் ஆண்டு விழா நடந்தது.
காலை 6:30 மணிக்கு கணபதி ஹோமமும், 9 மணிக்கு விநாயகர் மற்றும் அம்மனுக்கு அபிஷேகமும் மகா தீபாராதனையும் நடந்தது. நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
