/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா
/
சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா
ADDED : ஜூலை 08, 2025 09:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்; அப்பநாயக்கன்பட்டி சக்தி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா கடந்த 6 ம்தேதி துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, அக்னி கம்பம் நடப்பட்டு, பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடினர். நேற்று அம்மை அழைத்தல் மற்றும் கல்யாண உற்சவம் நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
இன்று, மாவிளக்கு எடுத்தல், தீச்சட்டி எடுத்து வரும் பக்தர்கள், பொங்கல் வைத்து வழிபாடு நடத்துகின்றனர். நாளை அம்மன் திருவீதி உலா மற்றும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.