/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
2 மாதமாக சம்பளம் வரவில்லை; கணினி உதவியாளர்கள் தவிப்பு
/
2 மாதமாக சம்பளம் வரவில்லை; கணினி உதவியாளர்கள் தவிப்பு
2 மாதமாக சம்பளம் வரவில்லை; கணினி உதவியாளர்கள் தவிப்பு
2 மாதமாக சம்பளம் வரவில்லை; கணினி உதவியாளர்கள் தவிப்பு
ADDED : பிப் 19, 2025 10:12 PM
கோவில்பாளையம் ; ஊரக வளர்ச்சித் துறையின் கீழ், தற்காலிக பணியாளர்களாக, கணினி உதவியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஊராட்சி அலுவலகங்களில் மாத சம்பளம் 12,000 ரூபாயில் பணியாற்றுகின்றனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திட்டம் மற்றும் 100 நாள் வேலைத்திட்டம் ஆகியவற்றில் 15000 முதல் 18 ஆயிரம் ரூபாய் வரையிலான சம்பளத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் 5ம் தேதி முதல் 10ம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்பட்டு விடும். ஆனால் தற்போது டிசம்பர் மாதத்திற்குரிய சம்பளம் ஜன., 5ம் தேதி வழங்க வேண்டியது வழங்கப்படவில்லை. பிப்., 5ம் தேதி வழங்கப்பட வேண்டிய சம்பளமும் 19ம் தேதி ஆகியும் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் மிகுந்த தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
'அரசு விரைவில் கணினி உதவியாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்,' என கோரிக்கை விடுத்துள்ளனர்.