/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தடை செய்த மருந்து விற்பனை; இரண்டு கடைகளின் உரிமம் ரத்து
/
தடை செய்த மருந்து விற்பனை; இரண்டு கடைகளின் உரிமம் ரத்து
தடை செய்த மருந்து விற்பனை; இரண்டு கடைகளின் உரிமம் ரத்து
தடை செய்த மருந்து விற்பனை; இரண்டு கடைகளின் உரிமம் ரத்து
ADDED : ஏப் 11, 2025 10:59 PM
கோவை; தடைசெய்யப்பட்டுள்ள மருந்தை, விதிமுறை மீறி விற்பனை செய்த இரண்டு மருந்து கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கால்நடைகளுக்கு பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மருந்தான, நிமிசுலைடு மருந்தை உண்ணும் விலங்குகளின் இறந்த உடல்களை உண்ணும் கழுகும், இம்மருந்தால் பாதிக்கப்பட்டு அதிகளவில் இறக்கின்றன. இதன் காரணமாகவே தடை அறிவிக்கப்பட்டது. கோவையில், மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து, கோவை மண்டல மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குனர் மாரிமுத்து கூறுகையில், '' நிமிசுலைடு மருந்துகளை விதிமுறை மீறி, விற்பனை செய்த இரண்டு மருந்துகடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 5 கடைகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். உரிய விசாரணைக்கு பின் இக்கடைகள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், '' என்றார்.