/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கஞ்சா விற்பனை; பெண்கள் உட்பட 7 பேர் கைது
/
கஞ்சா விற்பனை; பெண்கள் உட்பட 7 பேர் கைது
ADDED : அக் 21, 2024 03:46 AM
கோவை : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்கள் உள்பட, 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை குனியமுத்துார் பொன்னுசாமி சந்து பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாலையில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த, இரண்டு பெண்களை அழைத்து போலீசார் விசாரித்தனர். அவர்களுடன் இருந்த வாலிபரை சோதனை செய்தனர்.
அவரிடம், கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. விசாரணையில், அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் பூசாரி பட்டியைச் சேர்ந்த கவிதா, 32, நாகனப்பள்ளியைச் சேர்ந்த மீனா, 35, செல்லாண்டி நகரைச் சேர்ந்த கோகுல்நாத், 22, என்பது தெரிந்தது. அவர்களை கைது செய்தனர்.
இவர்கள், கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து, ஒரு கிலோ 575 கிராம் கஞ்சா மற்றும் ரூ.12 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மூவரையும் சிறையில் அடைத்தனர்.
* துடியலுார் போலீசார், சரவணம்பட்டி ரயில்வே கேட் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நஞ்சப்பா கவுண்டர் காலனியை சேர்ந்த பவன் ஜெய் நரசிம்மன், 19, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 110 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
* செல்வபுரம் போலீசார் ரோந்து சென்றபோது, தெலுங்குபாளையம் ரவுண்டானா அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட செல்வபுரத்தை சேர்ந்த டிரைவர் அப்துல் சபீர், 23, செல்வபுரம் சேத்துமாவாய்க்காலை சேர்ந்த மனோஜ் குமார், 24, தெலுங்குபாளையம் அம்மன்நகரை சேர்ந்த பிரவீன், 32, ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.