/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மது 'சில்லிங்' விற்பனை ஜோர்; கண்டுகொள்ளாத போலீசார்
/
மது 'சில்லிங்' விற்பனை ஜோர்; கண்டுகொள்ளாத போலீசார்
மது 'சில்லிங்' விற்பனை ஜோர்; கண்டுகொள்ளாத போலீசார்
மது 'சில்லிங்' விற்பனை ஜோர்; கண்டுகொள்ளாத போலீசார்
ADDED : மே 27, 2025 09:08 PM
வால்பாறை : வால்பாறை நகர், சோலையார்டேம், பாரளை உள்ளிட்ட நான்கு இடங்களில் மட்டும் 'டாஸ்மாக்' மதுக்கடைகள் செயல்படுகின்றன. மக்கள் நெருக்கம் மிகுந்த வால்பாறை நகரில் இரண்டு மதுக்கடைகள் செயல்படுகின்றன.
சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் நிலையில், தங்கும் விடுதிக்கும், எஸ்டேட் பகுதியிலும் தேவையான அளவு மதுபானங்கள் 'சில்லிங்' முறையில் விற்பனை செய்யப்படுகிறது.
குறிப்பாக, மக்கள் அதிகளவில் கூடும் இடங்களிலும், சுற்றுலா பயணியர் வாகனங்களை நிறுத்தும் இடங்களிலும், 'சில்லிங்' மதுவிற்பனை ஜோராக நடக்கிறது. உள்ளூர் போலீசாரும் இதை கண்டு கொள்ளாததால், நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் 'சில்லிங்' மதுவிற்பனை தடையின்றி நடக்கிறது.
'டாஸ்மாக்' மதுக்கடைகளிலிருந்து 'சில்லிங்' விற்பனையாளர்களுக்கு மதுபான பாட்டில் கூடுதல் விலைக்கு வழங்குவதை தடுக்க வேண்டும். போலீசார் இதனை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, வால்பாறையில் 'சில்லிங்' மதுவிற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.