/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தபால் அலுவலகத்தில் கங்கை தீர்த்தம் விற்பனை
/
தபால் அலுவலகத்தில் கங்கை தீர்த்தம் விற்பனை
ADDED : டிச 31, 2024 04:50 AM
பொள்ளாச்சி : பாட்டிலில் அடைக்கப்பட்ட புனிதமான கங்கை தீர்த்தம், பொள்ளாச்சி தலைமை தபால் அலுவலகத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
பொள்ளாச்சியில், தலைமை தபால் அலுவலகம், உடுமலை ரோட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தபால் அட்டைவிற்பனை, பார்சல் அனுப்புதல், பணப் பணிமாற்றம், பணம் டெபாசிட் செய்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இங்கு, 250 மில்லி லிட்டர் கொண்ட பாட்டிலில் அடைத்த கங்கை புனித தீர்த்தம், விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
தபால் அலுவலர்கள் கூறுகையில், 'பொதுமக்களின் வசதிக்காக, கங்கை தீர்த்தம் பாட்டில்கள், தபால் அலுவலகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. ஒரு பாட்டிலின் விலை, 30 ரூபாய்,' என்றனர்.