/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேலம் கோட்டத்துக்கு மாற்ற வேண்டும்! ரயில் பயணியர் கோரிக்கை
/
சேலம் கோட்டத்துக்கு மாற்ற வேண்டும்! ரயில் பயணியர் கோரிக்கை
சேலம் கோட்டத்துக்கு மாற்ற வேண்டும்! ரயில் பயணியர் கோரிக்கை
சேலம் கோட்டத்துக்கு மாற்ற வேண்டும்! ரயில் பயணியர் கோரிக்கை
ADDED : பிப் 16, 2024 09:01 PM
கிணத்துக்கடவு:பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனை, சேலம் ரயில்வே கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்லும் வழித்தடத்தில், கிணத்துக்கடவு மற்றும் போத்தனுார் பகுதிகளில் ரயில் நிறுத்தப்பட்டு பயணியர் ஏற்றி இறக்கி செல்கிறது.
கிணத்துக்கடவில் ரயில்வே ஸ்டேஷன் துவங்கப்பட்ட காலத்தில்,மதுரை கோட்டத்துடன் இணைக்கப்பட்டு இருந்தது.
கோவையில் பஸ் வசதி குறைவாக இருந்த காலத்தில், ரயில் சேவை வாயிலாக, கோவையில் இருந்து நெல்லை, துாத்துக்குடி, திண்டுக்கல், செங்கோட்டை போன்ற தென் மாவட்டங்களுக்கு மக்கள் சென்று வந்தனர்.
புதிதாக சேலம் கோட்டம் துவங்கிய போது, கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் பகுதிகள் பாலக்காடு ரயில்வே கோட்டத்துடன் இணைக்கப்பட்டது. அதன்பின் பொள்ளாச்சி - கோவை மற்றும் கோவை - மதுரை என ரயில் மட்டுமே இயக்கப்பட்டது. மற்ற ஊர்களுக்கு ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டது.
தற்போது, பண்டிகை நாட்களில் மட்டுமே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இதனால் பலதரப்பட்ட மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
சேலம் கோட்டத்தில், கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், கரூர், மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷன்கள் தனி சிறப்பை பெற்றுள்ளன. ஆனால், பாலக்காடு கோட்டத்தில் இருக்கும் பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில், கூடுதல் ரயில்கள் இயக்கவே போராட வேண்டியுள்ளது.
எனவே, கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனை பாலக்காடு கோட்டத்தில் இருந்து, சேலம் கோட்டத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும், என, ரயில் பயணியர் வலியுறுத்துகின்றனர்.