/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.2.37 கோடிக்கு விற்பனை
/
உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.2.37 கோடிக்கு விற்பனை
உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.2.37 கோடிக்கு விற்பனை
உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.2.37 கோடிக்கு விற்பனை
ADDED : ஜன 03, 2026 06:56 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி உழவர் சந்தையில் கடந்த மாதம், 2.37 கோடி ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனையாகியுள்ளன.
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை, ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அடையாள அட்டை பெற்றுள்ள, 300க்கும் மேற்பட்ட விவசாயிகள், அவ்வப்போது உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
காய்கறிகள் தரமாகவும், விலை மலிவாகவும், விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்வதால், நுகர்வோர்கள் உழவர் சந்தையில் காய்கறி வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த மாதம், 2 கோடியே, 37 லட்சத்து, ஆயிரத்து, 5--00 ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.
அதிகாரிகள் கூறுகையில்,'உழவர் சந்தைக்கு கடந்த மாதம் நாளொன்றுக்கு, 7 லட்சத்து, 64 ஆயிரத்து, 564 ரூபாய் மதிப்புள்ள, 15,830 கிலோ காய்கறிகள் வரத்து இருந்தது. ஒரு நாளுக்கு, 66 விவசாயிகளும், 3,166 நுகர்வோர்களும் வருகைபுரிந்தனர்.
கடந்த மாதம் மொத்தம், 490.8 டன் காய்கறி வரத்து இருந்தது. இவைகளின் மொத்த விற்பனை மதிப்பு, இரண்டு கோடியே, 37 லட்சத்து, ஆயிரத்து, 500 ரூபாயாகும். மொத்தம், 2,054 விவசாயிகள், 98 ஆயிரத்து, 152 நுகர்வோர்கள் பயன்பெற்றனர்,' என்றனர்.

