/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐயப்பன் பூஜா சங்கத்தில் சமஷ்டி உபநயன விழா
/
ஐயப்பன் பூஜா சங்கத்தில் சமஷ்டி உபநயன விழா
ADDED : மே 26, 2025 05:33 AM

கோவை; ராம்நகர் சத்தியமூர்த்தி சாலையிலுள்ள, ஐயப்பன் பூஜா சங்கத்தில் நேற்று நடந்த, சமஷ்டி உபநயன விழாவில், திரளான குழந்தைகள் பெற்றோருடன் பங்கேற்று, குருவணக்கம் செலுத்தி பூணுால் அணிந்து கொண்டனர்.
ராம்நகர் ஐயப்பன்பூஜா சங்கத்தில், நேற்று காலை மங்கள வாத்தியங்கள், வேத மந்திரங்கள் முழங்க வேதவிற்பன்னர்கள் வேதபாராயணம் செய்ய, பூணுால் அணிவிக்கப்பட்டது. குழந்தைகள் குரு வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து, குழந்தைகளுக்கு வேத மந்திரங்கள் சொல்லிக் கொடுத்து, அன்றாடம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் கற்றுக்கொடுக்கப்பட்டன.
ஐயப்பன் பூஜாசங்கம் சார்பில் சீர்வரிசை பொருட்கள் கொடுத்து கவுரவிக்கப்பட்டனர்.
திரளான பெற்றோர்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர்.
ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்க தலைவர் கணேசன் உள்ளிட்டநிர்வாகிகள் பங்கேற்றனர்.