/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிராமணர் சங்கத்தில் சாமவேத உபாகர்மா
/
பிராமணர் சங்கத்தில் சாமவேத உபாகர்மா
ADDED : ஆக 26, 2025 10:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடவள்ளி; தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், ஆவணி அவிட்டம், பூணுால் மாற்றும் விழா, வடவள்ளியில் உள்ள தாம்ப்ராஸ் ஹாலில் நேற்று நடந்தது. சாம உபாகர்மா எனும் பூணுால் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
ஸ்ரீ லக்ஷ்மண சாஸ்திரிகள் தலைமையில், பூணுால் மாற்றுவதற்கான யாகங்கள் நடந்தன. உலக மக்கள் நலமுடன் வாழவும், சமுதாயம் முன்னேற்றம் அடையவும், குடும்பம் வளர்ச்சி அடையவும் பிரார்த்தனைகள் செய்து, பூணுால் மாற்றப்பட்டது. 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.