/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிறிஸ்துமஸ் கேக்கில் அதிக கலர் கண்டறிய மாதிரிகள் சேகரிப்பு
/
கிறிஸ்துமஸ் கேக்கில் அதிக கலர் கண்டறிய மாதிரிகள் சேகரிப்பு
கிறிஸ்துமஸ் கேக்கில் அதிக கலர் கண்டறிய மாதிரிகள் சேகரிப்பு
கிறிஸ்துமஸ் கேக்கில் அதிக கலர் கண்டறிய மாதிரிகள் சேகரிப்பு
ADDED : டிச 18, 2025 07:51 AM
பொள்ளாச்சி: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, மாவட்ட அளவில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பேக்கரி, ஹோட்டல்களில் கேக் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
பொதுவாக, பண்டிகை நாட்களில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில், சிறப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, கேக் தயாரிப்பு இடங்களில் ஆய்வுகள் துவக்கப்பட்டுள்ளன.
சுகாதாரமின்மை, அதிக வண்ணங்களுடன் இருந்த கேக், பரிசோதனை மாதிரிக்கு எடுக்கப்பட்டுள்ளன.
மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கூறுகையில், ''கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிக்கும், விற்பனை செய்யும் இடங்களில் ஆய்வு மேற்கொள்கின்றோம். தற்போது வரை, 21 மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம்.
இதே குழு, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., அறிவுறுத்தலின் படி, வறுத்த வெள்ளை சுண்டல் (சன்னா) 11 மாதிரிகள் எடுத்து ஆய்வகங்களுக்கு அனுப்பியுள்ளோம். வறுத்த வெள்ளை சுண்டலில், 'ஆரமைன்' எனும் செயற்கை நிறமி கலப்பதாக கூறப்படுகிறது. பரிசோதனை முடிவுகள் வந்தபின் இதுகுறித்து தெளிவுபடுத்தப்படும்,'' என்றார்.

