/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர் கைது
/
பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர் கைது
ADDED : டிச 18, 2025 07:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆனைமலை: ஆனைமலை சுற்றுப்பகுதியை சேர்ந்த, 25 வயது பெண் வீட்டில் இருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த, 19 வயது வாலிபர், தகாத வார்த்தைகளால் பேசி, தவறான முறையில் நடந்து கொள்ள முயற்சித்ததாக கூறப்படுகிறது.
அந்த பெண் சப்தம் போடவே, அவரது மாமனார், மாமியார் தடுக்க முற்பட்டனர். அவர்களை அந்த வாலிபர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.அந்த பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அப்பெண் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபரை கைது செய்தனர்.

