/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
/
கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
ADDED : ஜன 29, 2024 11:33 PM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவிலில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, விநாயக பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பவுர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள், சங்கடஹர சதுர்த்தியாக வழிபாடு நடத்தப்படுகிறது. விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் கோவிலில் நடக்கிறது. நேற்று, தை மாத தேய்பிறை சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவிலில், நேற்று மாலை கணபதி ேஹாமம், சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, சக்தி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
திப்பம்பட்டி சிவசக்தி கோவிலில் சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. ராஜ கணபதி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று மாலை, விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை நடந்தது. பூஜையில் சுமங்கலி பாக்கியத்துக்கு பெண்கள் மஞ்சள் கயிறு மாற்றிக்கொண்டனர். சங்கடம் போக்கும் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
* உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், விநாயகருக்கு பால், பன்னீர், உள்ளிட்ட திரவியங்களில் சிறப்பு அபிேஷகம் நடந்தது. விநாயகருக்கு தீபாராதனை நடந்தது. உடுமலை வ.உ.சி., வீதி வினைதீர்க்கும் விநாயகர் கோவில், சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில், குட்டைத்திடல் கோவில்களில் ேஹாமம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.
உடுமலை தளிரோடு சித்தி புத்தி விநாயகப் பெருமான், ஜி.டி.வி., லே - அவுட் செல்வவிநாயகர் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது.