/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சங்கனுார் பள்ளம் மேம்பாட்டு பணிகள் 70 சதவீதம் 'ஓவர்'
/
சங்கனுார் பள்ளம் மேம்பாட்டு பணிகள் 70 சதவீதம் 'ஓவர்'
சங்கனுார் பள்ளம் மேம்பாட்டு பணிகள் 70 சதவீதம் 'ஓவர்'
சங்கனுார் பள்ளம் மேம்பாட்டு பணிகள் 70 சதவீதம் 'ஓவர்'
ADDED : பிப் 22, 2024 05:58 AM
கோவை: கவுண்டம்பாளையம் அருகே மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து சத்தியமங்கலம் ரோடு வரை, 2.3 கி.மீ., துாரத்துக்கு, ரூ.49 கோடி மதிப்பீட்டில் சங்கனுார் பள்ளம் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இதில், 208 மீட்டர் துாரத்துக்கு 'கேபியான்' தொழில்நுட்பத்தில், தடுப்புச்சுவர் கட்டும் பணி, 70 சதவீதம் முடிந்துள்ளது.
208 மீட்டர் முதல் 1.7 கி.மீ., வரை, கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நடைபாதை, சைக்கிள் டிராக் போன்ற பணிகள் விரைவில் துவங்கப்படவுள்ளன.
இதுவரை ரூ.25.69 கோடி மதிப்பீட்டில் பணிகள் முடிந்துள்ளன. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், பணிகளை பார்வையிட்டார்.
பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்த அவர், விரைந்து முடிக்குமாறு அலுவலர்களை அறிவுறுத்தினார்.
மத்திய மண்டல உதவி கமிஷனர் செந்தில்குமரன், செயற்பொறியாளர் கருப்பசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.