/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சங்கரா கல்லுாரி என்.எஸ்.எஸ்., முகாம்
/
சங்கரா கல்லுாரி என்.எஸ்.எஸ்., முகாம்
ADDED : மார் 03, 2026 06:17 AM

அன்னுார்: குன்னத்துார்புதுாரில், சங்கரா அறிவியல் கல்லுாரியின் என்.எஸ்.எஸ்., முகாம் நடத்தப்பட்டது.
குன்னத்துார்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவர், மாணவியருக்கு, ஆரோக்கியம், ஒற்றுமை உணர்வு, போட்டி திறனை வளர்க்கும் வகையில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பொது மக்களுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டன.
பழனி ஆண்டவர் கோவில் கலையரங்கத்தில் சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. விதைப்பந்துகள் தயாரிக்கப்பட்டது. நாரணாபுரம் அம்மா பூங்கா வளாகத்தில் துாய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

