ADDED : செப் 23, 2026 10:03 PM
அ நிறம் | அளவு
கோவை: ராம்நகர் கோதண்டராமர் தேவஸ்தானத்தில், சங்கீத சமர்ப்பண் நிகழ்ச்சி வரும் 27ல் நடக்கிறது.
கோதண்டராமர் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் நாகசுப்ரமணியம் கூறியதாவது:
ராம்நகர் திருப்பாவை, திருவெம்பாவை கமிட்டி கலாசங்கம் குளோபல் ஆகியவை இணைந்து ராம்நகர் கோதண்டராமர் தேவஸ்தானத்திலுள்ள, ஸ்ரீ அபிநவவித்யாதீர்த்த பிரவசன மண்டபத்தில் சங்கீத சமர்ப்பண் நிகழ்ச்சியை வரும் 27 மாலை 6:30 மணிக்கு நடத்துகிறோம். இதில் காம்யாஸ்ரீ பரசுராமின் வாய்ப்பாட்டும், பிருந்தா ரகுநாத்தின் வயலின் இசையும், சாய்ராம் விஸ்வநாதனின் மிருதங்கம் மற்றும் கஞ்சிராவும் இசை மழை பொழியப்போகிறது. ஏற்பாடுகளை கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானம் செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
