/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முற்றுகை போராட்டத்துக்கு வந்த துாய்மை பணியாளர்கள் கைது
/
முற்றுகை போராட்டத்துக்கு வந்த துாய்மை பணியாளர்கள் கைது
முற்றுகை போராட்டத்துக்கு வந்த துாய்மை பணியாளர்கள் கைது
முற்றுகை போராட்டத்துக்கு வந்த துாய்மை பணியாளர்கள் கைது
ADDED : ஆக 14, 2025 08:47 PM

கோவை; கோவை மாநகராட்சி அலுவலகத்தில், தொடர் முற்றுகைப் போராட்டம் நடத்த வந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு அம்பேத்கர் துாய்மை பணியாளர் சங்கம், அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில், அண்ணா சுகாதார பணியாளர் சங்கத்தினர், கோவை மாநகராட்சி அலுவலகத்தில் தொடர் முற்றுகைப் போராட்டம் நடத்த நேற்று திரண்டனர்.
இவர்களின் முக்கிய கோரிக்கையாக, கோவை மாநகராட்சியில் பணிபுரியும், ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்களுக்கு பணிநிரந்தரம் செய்ய வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் இருந்த துாய்மை பணியாளர்கள் வருகை பதிவேடு நேரம், காலை 7:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை என்பதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்; 2021ல் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது போல், கோவை மாநகராட்சியில் பணிபுரிந்து மரணமடைந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வாரிசு வேலையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
கோவை கோனியம்மன் கோவில் அருகே, போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட இவர்கள், மாநகராட்சி அலுவலகம் செல்ல முற்பட்ட போது, கைது செய்யப்பட்டனர்.