/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீபாவளி மறுநாள் லீவு வேண்டும்: துாய்மை பணியாளர்கள் கோரிக்கை
/
தீபாவளி மறுநாள் லீவு வேண்டும்: துாய்மை பணியாளர்கள் கோரிக்கை
தீபாவளி மறுநாள் லீவு வேண்டும்: துாய்மை பணியாளர்கள் கோரிக்கை
தீபாவளி மறுநாள் லீவு வேண்டும்: துாய்மை பணியாளர்கள் கோரிக்கை
ADDED : அக் 19, 2025 10:54 PM

கோவை: அரசு பணியாளர்களுக்கு விடுமுறை வழங்கியிருப்பது போல், தீபாவளிக்கு அடுத்த நாள் துாய்மை பணியாளர்களுக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என, துாய்மை பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, கோவை ஏ.ஐ.டி.யூ.சி., லேபர் யூனியன் செயலாளர் செல்வராஜ் கூறியிருப்பதாவது:
தீபாவளியை முன்னிட்டு, அரசு பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறையில் சென்றுள்ளனர். தமிழக அரசு, தீபாவளிக்கு அடுத்த நாளும் அரசு விடுமுறை என அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை எடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் துாய்மை பணியாளர்களுக்கு தீபாவளியன்று, ஒரு நாள் மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஞாயிற்றக்கிழமையான இன்று(நேற்று) துாய்மை பணியாளர்கள் வேலைக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எனவே, மாநகராட்சி ஓட்டுனர்கள் மற்றும் அனைத்து துாய்மை பணியாளர்களுக்கும், தீபாவளிக்கு அடுத்த நாள் செவ்வாய் விடுமுறை கொடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.