/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீபாவளியை முன்னிட்டு மல்லிகை பூ விலை அதிகரிப்பு
/
தீபாவளியை முன்னிட்டு மல்லிகை பூ விலை அதிகரிப்பு
ADDED : அக் 19, 2025 10:54 PM

கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மல்லி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கோவை பூமார்க்கெட்டுக்கு, ஊட்டி, கோபி, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், திண்டுக்கல் மற்றும் நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, தினமும் உதிரிப்பூக்கள் விற்பனை கொண்டு வரப்படுகின்றன.
தினமும், 10 முதல் 12 டன் வரை உதிரிப்பூக்கள் விற்பனைக்கு வருகிறது. முகூர்த்தம் மற்றும் பண்டிகை காலங்களில், இந்த அளவு அதிகரிக்கும்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மல்லி, முல்லை மற்றும் ஜாதிமல்லி விலை உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிலோ மல்லி, 2,400 ரூபாய்க்கும், முல்லை மற்றும் ஜாதிமல்லி 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கோவை மாநகர் மாவட்ட மலர் வியாபாரிகள் சங்க நிர்வாகி சிராஜூதீன் கூறுகையில், ''மல்லி, முல்லை மற்றும் ஜாதிமல்லி மட்டும்தான், விலை உயர்ந்துள்ளது.
''மற்ற பூக்கள் விலை அதிகரிக்கவில்லை. மழைக்காலம் துவங்குவதால், ஊதிரிப்பூக்கள் விலை இனி உயர வாய்ப்பு இல்லை,'' என்றார்.