/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவ பரிசோதனை நடத்துங்க துாய்மைப்பணியாளர்கள் கோரிக்கை
/
மருத்துவ பரிசோதனை நடத்துங்க துாய்மைப்பணியாளர்கள் கோரிக்கை
மருத்துவ பரிசோதனை நடத்துங்க துாய்மைப்பணியாளர்கள் கோரிக்கை
மருத்துவ பரிசோதனை நடத்துங்க துாய்மைப்பணியாளர்கள் கோரிக்கை
ADDED : ஏப் 14, 2025 10:10 PM
பொள்ளாச்சி, ;பேரூராட்சி மற்றும் ஊராட்சி துாய்மைப் பணியாளர்களுக்கு, குறிப்பிட்ட நாள் இடைவெளியில் முறையாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் துாய்மைப் பணியாளர்களுக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை முழு அளவிலான மருத்துவ பரிசோதனை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேபோல, குப்பையை கொட்டி மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை வகை பிரிக்கும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி இப்பணிகளில் ஈடுபடக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி தொடர் சிகிச்சை தேவைப்படும் பணியாளர்களுக்கு காப்பீட்டு திட்ட செலவில் இலவசமாகவே தேவையான சிகிச்சை வழங்க வேண்டும்.
ஆனால், பொள்ளாச்சி சுற்றுப்பகுதி பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் உள்ள துாய்மைப் பணியாளர்களுக்கு முறையாக, மருத்துவ பரிசோதனை நடத்தப்படுவதில்லை என, புகார் எழுந்துள்ளது.
குறிப்பிட்ட நாள் இடைவெளியில், மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் என, கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
துாய்மைப் பணியாளர்கள் கூறியதாவது:
கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில், பாதுகாப்பு உபகரணங்கள் இன்றியே துாய்மைப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். துாய்மைப் பணியாளர்கள் நலன் கருதி திட்டங்களை செயல்படுத்துவதில், அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை.
குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒரு முறை துாய்மைப் பணியாளர்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ரத்த பரிசோதனை, காய்ச்சல், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.
ஆனால், சமீபகாலமாக, துாய்மைப் பணியாளர்கள் எவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.