ADDED : பிப் 17, 2024 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;உடையாம்பாளையம் பகுதியில், பணிச்சுமையை கூட்டுவதாக கூறி துாய்மை பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி கிழக்கு மண்டலம், 50வது வார்டு உடையாம்பாளையம் பகுதியில் தற்காலிக துாய்மை பணியாளர்கள் நேற்று காலை, துாய்மை பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை, 7:30 மணியளவில் எட்டுக்கும் மேற்பட்டோர், திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி சுகாதார பிரிவு அலுவலர்கள், பணிச்சுமையை கூட்டுவதாகக்கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு, போராட்டம் கைவிடப்பட்டது.