/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.டி.சி.ஏ., ஆறாவது டிவிஷன் கிரிக்கெட் ஏழு விக்கெட் வீழ்த்தி சஞ்சய் 'வெரிகுட்'

ADDED : ஏப் 16, 2025 10:24 PM

கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில், ஒன்றாவது டிவிஷன் போட்டிகள் பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., உள்ளிட்ட மைதானங்களில், நடந்து வருகிறது. கோவை நைட்ஸ் அணியும், கோவை டஸ்கர்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த கோவை நைட்ஸ் அணி, 50 ஓவரில், 9 விக்கெட்டுக்கு, 248 ரன்கள் எடுத்தது.
அணி வீரர்கள் சரவணக்குமார், 48 ரன்கள், ராதாகிருஷ்ணன், 36 ரன்கள், ஷாஜகான், 34 ரன்களும் அதிகபட்சமாக எடுத்தனர்.
அடுத்து விளையாடிய கோவை டஸ்கர்ஸ் அணி, 47.4 ஓவரில், 219 ரன்கள் எடுத்தது. வீரர்கள் சோமசுந்தரம், 79 ரன்களும், முகமது ரபீக், 46 ரன்களும் எடுத்தனர்.
எதிரணி வீரர் குரு விக்னேஷ் நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார்.
அதேபோல், ஆறாவது டிவிஷன் போட்டி, எஸ்.என்.எம்.வி., மைதானத்தில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த ஏ.எஸ்.பி., என்டர்பிரைசஸ் அணி, 50 ஓவரில் எட்டு விக்கெட்டுக்கு, 244 ரன்கள் எடுத்தது.
வீரர்கள் துவர்கா பிரசாத், 37 ரன்களும், அப்துல் ரகுமான், 59 ரன்களும், ஜீவா, 58 ரன்களும், தனஜெய், 36 ரன்களும் எடுத்தனர்.
எதிரணி வீரர் சஞ்சய் குமார், ஏழு விக்கெட்கள் வீழ்த்தினார். அடுத்து விளையாடிய, ஸ்ரீ ராமகிருஷ்ணா எம்.வி.சி.சி., அணி, 25.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 68 ரன்கள் எடுத்தது.
எதிரணி வீரர் மணிகண்டன், நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார். தொடர்ந்து, போட்டிகள் நடக்கின்றன.