ADDED : பிப் 01, 2024 11:14 PM

கோவை:சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியின் சிறப்பு மாணவர்கள் குழு மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றனர்.
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியின் சிறப்பு (பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள) மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்கின்றனர். இந்தாண்டும் காது கேளாதோர் சங்கம் சார்பில் நடந்த மாநில மற்றும் தேசிய அளவிலான தடகளம், கைப்பந்து, கபடி, கிரிக்கெட், சதுரங்கம், ஓவியம் வரைதல், பூப்பந்து, குண்டு எறிதல் போன்ற பல விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றனர்.
சிறப்பாக செயல்பட்டு பதக்கங்கள் வென்ற மாற்றுத்திறனாளி மாணவர்களை, சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரி நிர்வாகத்தினர், கல்லுாரி முதல்வர் ராதிகா, துணை முதல்வர் பெர்னார்ட் எட்வர்ட், பேராசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர்.
