/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சான்டா' குழந்தைகள் பலுான் ஓட்ட போட்டி
/
'சான்டா' குழந்தைகள் பலுான் ஓட்ட போட்டி
ADDED : டிச 25, 2024 10:26 PM

கோவை; சரவணம்பட்டி, புரோசன் மாலில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு, சான்டா குழந்தைகள் பலுான் ஓட்டப் போட்டிநடந்தது.
புரோசன் மாலுடன், 'தினமலர்' நாளிதழ் மற்றும் அப்டவுன் கான்பெட்டி ஆகியவை இணைந்து கோவையில் முதன் முறையாக, குழந்தைகளுக்கான இந்தப் போட்டியை நடத்தியது.
ஒரு கி.மீ., துாரத்திற்கு நடந்த இந்த போட்டியில், 4 முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய பகுதிகளை சேர்ந்த,ஆயிரத்து 500 குழந்தைகள் பங்கேற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டன.போட்டிக்கான ஏற்பாடுகளை, கோவை அத்லெடிக் கிளப் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

