/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் கல்லுாரி சார்பில் மரக்கன்று நடும் விழா
/
வேளாண் கல்லுாரி சார்பில் மரக்கன்று நடும் விழா
ADDED : நவ 17, 2024 09:59 PM

கிணத்துக்கடவு; குருநல்லிபாளையம் ஊராட்சியில் அமிர்தா வேளாண் கல்லுாரி மாணவர்கள் மரக்கன்று நடவு செய்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கிணத்துக்கடவு, அரசம்பாளையத்தில் உள்ள அமிர்தா வேளாண் கல்லுாரியில், 4ம் ஆண்டு மாணவர்கள், ஊரக வேளாண் செயல்முறை பயிற்சி திட்டத்தின் கீழ், கல்லுாரி டீன் சுதீஷ் மணலில் அறிவுறுத்தலின் படி, குருநல்லிபாளையம் ஊராட்சியில் மரக்கன்று நடவு செய்து அப்பகுதி மக்களுக்கு மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், மரம் நடுதலின் அவசியம், மண் அரிப்பை தடுத்தல் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து விளக்கினர்.
ஊராட்சி பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்தனர். மேலும், பசுமையை பாதுகாத்தல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் விதமாக, விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக மாணவர்கள் தெரிவித்தனர்.