தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வானதி தொகுதியில் சரத்குமார் பிரசாரம்

 வானதி தொகுதியில் சரத்குமார் பிரசாரம்

 வானதி தொகுதியில் சரத்குமார் பிரசாரம்


ADDED : ஏப் 16, 2026 09:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2026 09:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடவள்ளி:கோவை வடக்கு தொகுதி வடவள்ளியில் பா.ஜ. வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து நடிகர் சரத்குமார் சீரநாயக்கன்பாளையம், வடவள்ளி, பொம்மனம்பாளையம், கல்வீரம்பாளையம், மருதமலை ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

அவர் பேசுகையில்,கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் சிறப்பாக செயல்பட்டார். விரைவில் குணமடைந்து, உங்களை சந்திப்பார். பல திட்டங்களை, பிரதமரிடம் எடுத்து சொல்லி, உங்களிடம் கொண்டுவரும் இடத்தில், வானதி சீனிவாசன் உள்ளார்” என்றார்.

”இந்த ஆட்சியில், 8 ஆயிரம் கொலைகள் நடந்துள்ளது. தமிழகத்தில், ஊழல் ஒருபக்கம், போதை கலாச்சாரம் ஒருபக்கம் உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க.விற்கு பாடம் கற்பிக்க வேண்டும். பிரதமர் மோடி கூறுவது போல, இரட்டை இன்ஜின் ஆட்சி வர வேண்டும்” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us