ADDED : ஏப் 19, 2026 04:26 AM

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்
n 1 கிலோ மத்தி மீன் n 2 கப் சின்ன வெங்காயம் n 6 தக்காளி n 2 மேஜை கரண்டி உப்பு n 1 ஸ்பூன் மிளகாய் தூள் n அரை ஸ்பூன் மஞ்சள் தூள் n 1 ஸ்பூன் கொத்தமல்லி தூள் n 1நெல்லிக்காய் அளவு புளி n 10 பச்சை மிளகாய் n 1 கப் கருவேப்பிலை செய்முறை : முதலில் சின்ன வெங்காயத்தை சிறிய சிறிய துண்டுகளாக நன்றாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிய வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்பு தக்காளி மற்றும் பச்சை மிளகாய் கருவேப்பிலை மிளகாய் தூள் மஞ்சள் தூள் கொத்தமல்லித்தூள் புளி கரைசல் சேர்த்து நன்றாக பத்து நிமிடம் கொதிக்க விடவும். கடைசியாக மத்தி மீனை சேர்த்து ஐந்து நிமிடம் நன்றாக வேக வைத்து பின்பு பரிமாறவும்.
