sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'மெட்ரோ ரயில்' திட்டத்துக்கேற்ப சத்தி ரோடு விஸ்தரிப்பு! 'மெட்ரோ' அதிகாரிகளுடன் எம்.பி., ஆலோசனை

/

'மெட்ரோ ரயில்' திட்டத்துக்கேற்ப சத்தி ரோடு விஸ்தரிப்பு! 'மெட்ரோ' அதிகாரிகளுடன் எம்.பி., ஆலோசனை

'மெட்ரோ ரயில்' திட்டத்துக்கேற்ப சத்தி ரோடு விஸ்தரிப்பு! 'மெட்ரோ' அதிகாரிகளுடன் எம்.பி., ஆலோசனை

'மெட்ரோ ரயில்' திட்டத்துக்கேற்ப சத்தி ரோடு விஸ்தரிப்பு! 'மெட்ரோ' அதிகாரிகளுடன் எம்.பி., ஆலோசனை


ADDED : ஜன 28, 2025 08:00 AM

Google News

ADDED : ஜன 28, 2025 08:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: 'மெட்ரோ ரயில்' திட்டம் செயல்படுத்துவதற்கு ஏற்ப, தேவையான நிலம் கையகப்படுத்தி, கோவை - சத்தி ரோட்டை விஸ்தரிக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

கோவையின் வடக்கு பகுதியான கணபதியில், போக்குவரத்து நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெக்ஸ்டூல் பாலம் முதல் சூர்யா மருத்துவமனை திருப்பம் வரை, ரோட்டை விஸ்தரிக்க மாநகராட்சி திட்டமிட்டது.

நிதி ஒதுக்கீடு


ரோட்டின் இருபுறமும் தலா மூன்று மீட்டர் அகலப்படுத்த, தேவையான நிலம் கையகப்படுத்த, நகரமைப்பு பிரிவினர் அளவீடு செய்தனர்.உள்ளூர் திட்ட குழும நிதியில், 38 கோடியே, 64 லட்சத்து, 81 ஆயிரத்து, 827 ரூபாய், 2020ல் ஒதுக்கப்பட்டது.

நான்கு ஆண்டுகள் கடந்து விட்டதால், தற்போதுள்ள சூழலில் மீண்டும் அளவீடு செய்து, மறு மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. கூடுதலாக, 15 கோடியே, 35 லட்சத்து, 18 ஆயிரத்து, 173 ரூபாய் தேவையென கணக்கிடப்பட்டது. அதனால், உள்ளூர் திட்ட குழும நிதியில், 54 கோடி ரூபாயை ஒதுக்கக்கோரி, மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, நகர ஊரமைப்புத்துறைக்கு அனுப்பப்பட்டது.

வருகிறது மெட்ரோ


இச்சூழலில், சத்தி ரோட்டின் மையத்தில் 'மெட்ரோ ரயில்' வழித்தடம் அமைவதாக, 'மெட்ரோ ரயில்' நிறுவனம் தெரிவித்திருக்கிறது. தற்போது ரோட்டை அகலப்படுத்தும்போது, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை குழாய், மின் ஒயர் மற்றும் டெலிபோன் கேபிள்களை வேறிடத்துக்கு மாற்ற வேண்டும்.

இதேபோல், மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும்போது, மீண்டும் வேறிடத்துக்கு மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். அதை தவிர்க்க, ஒரே நேரத்தில், 'மெட்ரா ரயில்' திட்ட வடிவமைப்புக்கேற்ப, தேவையான நிலத்தை கையகப்படுத்தி, குழாய்களை மாற்றியமைக்க மாநகராட்சி முடிவெடுத்திருக்கிறது.

ஆலோசனைக்கூட்டம்


இதுதொடர்பாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. மெட்ரோ நிறுவன மேலாண்மை இயக்குனர் சித்திக், தலைமை பொது மேலாளர் லிவிங்ஸ்டன், கோவை எம்.பி., ராஜ்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

சத்தி ரோட்டில் எந்த பகுதியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்பது தொடர்பாக விளக்கம் கோரப்பட்டது. ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்படும் மெட்ரோ ரயில், ராம்நகர் வழியாக காந்திபுரம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட், ஆம்னி பஸ் ஸ்டாண்ட், டெக்ஸ்டூல் பாலம் வழியாக கடந்து செல்லும்.

காந்திபுரம் நஞ்சப்பா ரோடு, கிராஸ்கட் ரோடு, டெக்ஸ்டூல் பகுதியில் பாலங்கள் இருப்பதால், அதன் அருகாமையில் 'மெட்ரோ ரயில்' பாதை அமைக்கப்படும். அதன்பின், ரோட்டின் மையப்பகுதியில் பயணிக்கும் என, மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர். அதனால், மெட்ரோ திட்டத்துக்கு ஏற்ப, தேவையான நிலங்கள் கையகப்படுத்த, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

'புரோசோன் வரை சாலை விரிவாக்கம்'

எம்.பி., ராஜ்குமார் கூறியதாவது:டெக்ஸ்டூல் பாலத்தில் இருந்து, சூர்யா மருத்துவமனை திருப்பம் வரை, சத்தி ரோட்டை விஸ்தரிக்க திட்டமிட்டிருந்தோம். நெடுஞ்சாலைத்துறை நிதி ஒதுக்க இருப்பதால், புரோசோன் மால் வரை விஸ்தரிக்கப்படும்.இதே வழித்தடத்தில், 'மெட்ரோ ரயில்' செல்ல இருப்பதால், அதற்கும் நிலம் கையகப்படுத்த வேண்டும். இவ்விரு பணிகளையும் ஒருங்கே மாநகராட்சி மேற்கொள்ள இருக்கிறது. பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்க, சத்தி ரோடு விரிவாக்கம் மற்றும் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தேவையான நிலத்தை, கையகப்படுத்த உள்ளோம். மெட்ரோவுக்கு எவ்வளவு நிலம் தேவை; எந்தெந்த இடங்களில் துாண் அமைகிறது என்பன போன்ற தகவல் கோரியுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us