தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'பயனுள்ள வகையில் பணத்தை செலவிட்ட திருப்தி'

 'பயனுள்ள வகையில் பணத்தை செலவிட்ட திருப்தி'

 'பயனுள்ள வகையில் பணத்தை செலவிட்ட திருப்தி'


UPDATED : பிப் 18, 2026 06:24 AM

ADDED : பிப் 18, 2026 06:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 18, 2026 06:24 AM ADDED : பிப் 18, 2026 06:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சட்டசபை தேர்தல் வர இருப்பதால் மகளிர் உரிமைத் தொகை பெறும் 1.31 கோடி மகளிரின் வங்கி கணக்கில் ்தமிழக அரசு சார்பில் 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. இது குறித்து மக்கள் என்ன சொல்கிறார்கள்

சந்தோஷம் அளிக்கிறது

அரசு கொடுத்த மகளிருக்கான 5000 ரூபாய் வங்கி கணக்கில் ஏறியது சந்தோஷம் அளித்தது. என்னை போன்ற சிங்கிள் பேரண்ட் சிறு தொழில் செய்யும் (டெய்லரிங்) மகளிர்க்கு மூலப் பொருள்களை வாங்குவதற்கு கை கொடுத்தது சந்தோஷம் அளிக்கிறது.

சந்தோஷனா காரமடை.

மருத்துவ செலவுக்கு உதவியது

மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வந்து கொண்டிருக்கிறது. திடீரென என் வங்கி கணக்கில், 5000 ரூபாய் வரவு வைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. இதை என்னுடைய மருத்துவ செலவுக்காகவும் மற்றும் அத்தியாவசிய செலவுக்காகவும் பயன் படுத்திக் கொண்டேன். தமிழக அரசுக்கு நன்றி.

சந்திரா, வேலாண்டிபாளையம்.

சுப காரியங்கள்

5 ஆயிரம் ரூபாய் கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. இதை சுப காரியங்களுக்காக செலவு செய்தேன். இந்த மாதம் நிறைய திருமண நிகழ்ச்சிகள், விசேஷங்களுக்கு மொய் பணம் வைக்க இந்த பணம் மிகவும் உதவியாக இருந்தது.

பத்திரம்மாள், மருதூர்.

திருப்தி கிடைத்தது

எதிர்பாராத வகையில், அரசால் வழங்கப்பட்ட, 5 ஆயிரம் ரூபாயை கொண்டு, திருமண நாளன்று, குடும்பத்துடன் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டோம். மீதமுள்ள பணத்தில் குழந்தைக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்கி கொடுத்தேன். பயனுள்ள வகையில் பணத்தை செலவிட்ட திருப்தி கிடைத்தது.

ஆர். லோகநாயகி, சூலூர்.

சிறு கடனை அடைக்க உதவியது

குடும்பத்தின் அவசர தேவைக்காக வெளியில் கடன் பெற்றிருந்தேன். தமிழக அரசு வழங்கிய, 5,000 ரூபாய் அந்த கடனில் ஒரு பகுதியை அடைக்க உதவியது. இதனால் அந்தக் கடனுக்கு செலுத்தும் வட்டி குறைந்தது. இது உதவியாக இருந்தது.வீட்டு உபயோகப் பொருள் வாங்க உதவியது

கார்த்தியாயிணி, அன்னூர்.



வீட்டு உபயோக பொருட்கள்

தமிழக அரசு வழங்கிய 5 ஆயிரம் ரூபாய் வீட்டு உபயோக பொருட்கள் சிலவற்றை வாங்குவதற்கு உதவியது. இப்பொருட்கள் வாங்குவது குறித்து சில நாட்களாக யோசித்து வந்தோம்.

பணம் வந்ததால் உடனே வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்கு பயன்பட்டது.

கண்ணம்மாள், அன்னூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us