தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சனி பெயர்ச்சி; கோவில்களில் சிறப்பு பூஜை

 சனி பெயர்ச்சி; கோவில்களில் சிறப்பு பூஜை

 சனி பெயர்ச்சி; கோவில்களில் சிறப்பு பூஜை


ADDED : மார் 07, 2026 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2026 06:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

---- நிருபர் குழு -:

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சனீஸ்வர பகவான், நேற்று காலை, 8:24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து, மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். சனி பெயர்ச்சியை முன்னிட்டு கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதில், பொள்ளாச்சி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், சனீஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், ேஹாம பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

* சேரன் தொழிலாளர் காலனி செல்வ விநாயகர் கோவிலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனீஸ்வரருக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

சிறப்பு அலங்காரத்தில் சனீஸ்வரர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

* ஆனைமலை விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் தனி சன்னதியில் வீற்றிருக்கும் சனீஸ்வரருக்கு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை, 5:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, பரிகார யாகம், காலை, 7:00 மணிக்கு பூர்ணாஹுதி, அபிேஷகம் நடைபெற்றன. தொடர்ந்து காலை, 8:24 மணிக்கு சனீஸ்வர பெருமானுக்கு தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இந்த சனி பெயர்ச்சியால், ரிஷபம், கடகம், துலாம், மகரம் சுய பயன் அடையும் ராசியினர் வழிபாடு செய்தனர். மேலும், மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் உள்ளிட்ட ராசிகள், பரிகாரம் செய்து சனீஸ்வரரை வழிபாடு செய்தனர்.

வால்பாறை வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் சனிப்பெயர்ச்சி யாக பூஜை நேற்று காலை நடந்தது. கோவில் முன் மண்டபத்தில் நடந்த யாக பூஜையில் அபிேஷக, ஆராதனைகள் நடைபெற்றன. காலை, 9:00 மணிக்கு துவங்கிய யாக பூஜை மதியம், 12:00 மணி வரை நடந்தது. சனிப்பெயர்ச்சி யாக பூஜையில் பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.

உடுமலை சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. நிகழ்ச்சியில், வெள்ளி கவசத்தில் சனி பகவான் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதே போல், செல்லப்பம்பாளையம் காசி பாணலிங்கேஸ்வரர் சனீஸ்வரர் கோவில், உடுமலை நேரு நகர் காமாட்சி அம்மன் கோவில் சனீஸ்வர பகவான் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us