ADDED : மார் 01, 2024 10:59 PM
அ நிறம் | அளவு
கோவை;கோவை, இன்பேன்ட் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர் தங்களது சிறுசேமிப்பு மூலம் சேமித்த தொகை, 85 ஆயிரத்து, 500 ரூபாய்க்கான காசோலையை, தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கிராந்திகுமாரிடம் நேற்று வழங்கினர்.
அப்போது, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோகிலா, பள்ளி முதல்வர் ஹேமலதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
