/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சவுக்கு சங்கர் கோர்ட்டில் ஆஜர்
/
சவுக்கு சங்கர் கோர்ட்டில் ஆஜர்
ADDED : செப் 09, 2025 06:24 AM

கோவை: 'சவுக்கு மீடியா' என்ற 'யு டியூப்' சேனல் நடத்தி வந்த, சென்னையை சேர்ந்த சங்கர், 'ரெட்பிக்ஸ்' என்ற 'யு டியூப்' சேனலுக்கு பேட்டி அளித்தபோது, பெண் போலீஸ் குறித்து அவதுாறு கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்தது.
சவுக்கு சங்கர், பேட்டி எடுத்த 'யு டியூப்' சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர், கோவை சைபர் கிரைம் போலீசாரால், கடந் தாண்டு கைது செய்யப் பட்டனர். இவர்கள் மீது கோவை ஜே.எம். 4, கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
மாஜிஸ்திரேட் அருண்குமார் முன்னிலையில், சாட்சி விசாரணை நடந்து வருகிறது. வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் ஆஜராகினர். விசாரணை, 23க்கு ஒத்திவைக்கப்பட்டது.