/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ் ஸ்டாண்டில் எஸ்.பி., 'சர்ப்ரைஸ் விசிட்' :கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுரை
/
பஸ் ஸ்டாண்டில் எஸ்.பி., 'சர்ப்ரைஸ் விசிட்' :கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுரை
பஸ் ஸ்டாண்டில் எஸ்.பி., 'சர்ப்ரைஸ் விசிட்' :கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுரை
பஸ் ஸ்டாண்டில் எஸ்.பி., 'சர்ப்ரைஸ் விசிட்' :கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுரை
ADDED : பிப் 13, 2024 11:15 PM

பொள்ளாச்சி;'பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்டில், காவல் உதவி மையத்தை முறையாக பராமரிக்க வேண்டும்; 24 மணி நேரமும் கண்காணிப்பில் போலீசார் ஈடுபட வேண்டும்,' என, எஸ்.பி., பத்ரிநாராயணன், போலீசாருக்கு உத்தரவிட்டார்.
பொள்ளாச்சி நகராட்சியில் பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டுகள் உள்ளன. இங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணியர் தினமும் வந்து செல்கின்றனர். இரவு நேரங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் மக்களிடம், மொபைல்போன் பறித்துச் செல்வது; இரவு நேரங்களில் மது போதையில் பணம் மற்றும் பொருட்களை பறிப்பது போன்ற செயல்களில் மர்மநபர்கள் ஈடுபடுகின்றனர்.
மர்மநபர்களின் நடமாட்டத்தால், பஸ் ஸ்டாண்டில் பொதுமக்கள் அச்சத்துடன் காத்திருக்கும் நிலை உள்ளது. போதிய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடாமல் இருப்பதால், மர்மநபர்களின் கைவரிசை அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன், மதுபோதையில் படுத்து இருந்த நபரிடம் பொருட்களை சிலர் பறிப்பது போன்று கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலானது.
இந்நிலையில், பொள்ளாச்சி பழைய, புது பஸ் ஸ்டாண்டுகளை எஸ்.பி., பத்ரிநாராயணன் நேற்று திடீர் ஆய்வு செய்தார். பழைய பஸ் ஸ்டாண்டில் பழுதடைந்த காவல் உதவி மையத்தை, நகராட்சியுடன் கலந்தாலோசித்து, அருகில் தகுந்த இடத்துக்கு மாற்றி புதுப்பொலிவுடன் சீரமைக்க வேண்டும்; கண்காணிப்பு கேமராக்களை, பஸ் ஸ்டாண்ட் மற்றும் சுற்றுப்பகுதியில் நிறுவ வேண்டும் என போலீசாரை அறிவுறுத்தினார்.
தெடார்ந்து, புதிய பஸ் ஸ்டாண்டை ஆய்வு செய்த எஸ்.பி., 'காவல் உதவி மையத்தை முறையாக பராமரிக்க வேண்டும். பஸ் ஸ்டாண்டில், 24 மணி நேரமும் காவல் உதவி மையத்தில் போலீசார் பணியமர்த்த வேண்டும். இரவு நேரங்களில் பயணிகளை தவிர்த்து சந்தேகப்படும்படியான நபர்களை கண்காணித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில், அங்கு பழுதடைந்த கண்காணிப்பு கேமராக்களை சரி செய்து, அதிகளவில் கேமராக்களை நிறுவ வேண்டும். இந்த கேமராக்களை, காவல் உதவி மையத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும்,' என அறிவுறுத்தனார். ஆய்வின் போது, டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உடன் இருந்தனர்.
ஆய்வால் பரபரப்பு
ஆனைமலை வந்த டி.எஸ்.பி., திடீரென, பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டுக்குள் சென்று ஆய்வு செய்தார். இதையடுத்து, போலீசார் அங்கு வந்தனர். எஸ்.பி., ஆய்வில் ஈடுபட்டதால் பஸ் ஸ்டாண்டில் இருந்த பயணியரிடையே, ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டதோ என பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணிகளை துரிதப்படுத்துவதற்காக ஆய்வு என்பதை அறிந்ததும் மக்கள் நிம்மதியடைந்தனர்.

