/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ் ஸ்டாண்டில் எஸ்.பி., ஆய்வு; போதை வஸ்து தடுக்க உத்தரவு
/
பஸ் ஸ்டாண்டில் எஸ்.பி., ஆய்வு; போதை வஸ்து தடுக்க உத்தரவு
பஸ் ஸ்டாண்டில் எஸ்.பி., ஆய்வு; போதை வஸ்து தடுக்க உத்தரவு
பஸ் ஸ்டாண்டில் எஸ்.பி., ஆய்வு; போதை வஸ்து தடுக்க உத்தரவு
ADDED : அக் 13, 2024 10:06 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகரில் திடீரென ஆய்வு நடத்திய போலீஸ் எஸ்.பி., போதை வஸ்துகள் விற்பனையைக் கண்டறிந்து தடுக்க உத்தரவிட்டார்.
பொள்ளாச்சி புது மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட் சுற்றுப்பகுதியில், போதை வஸ்து பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர் புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில், எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையிலான போலீசார், இப்பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.
குறிப்பாக, கடைகள்தோறும், பான், குட்கா, போதை வஸ்துக்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று விசாரிக்கப்பட்டது. விதிமீறி போதை வஸ்துகள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், சட்ட ரீதியான நடவடிக்கை பாயும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், புது பஸ் ஸ்டாண்டில், போலீசார் அறையில், கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடு மற்றும் கோப்புகளையும் சரிபார்க்கப்பட்டது. இதுதவிர, வாகன தணிக்கையும் செய்யப்பட்டது.
தொடர்ந்து, டூ வீலரில் செல்வோர் ெஹல்மெட் அணியவும், கார் ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணியவும் அறிவுறுத்தப்பட்டது. இன்ஸ்பெக்டர்கள் ரத்தினகுமார், ராஜேஸ்வரி, சப்இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.