/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இ.எஸ்.ஐ., சார்பில் உதவித்தொகை வழங்கல்
/
இ.எஸ்.ஐ., சார்பில் உதவித்தொகை வழங்கல்
ADDED : செப் 30, 2024 05:57 AM

பொள்ளாச்சி : சாலை விபத்தில் உயிரிழந்த தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியரின் குடும்பத்தினருக்கு இ.எஸ்.ஐ., உதவித் தொகை வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி, சின்னநெகமம் அருகே மூலனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் மாசிலாமணி, 44. இவர், கோவை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் உள்ள தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த, 2023ல், பணிக்கு செல்லும் போது, சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இ.எஸ்.ஐ., திட்டத்தின் கீழ் இவர் பதிவு செய்திருந்ததால், இறப்புக்கான உதவி தொகை வழங்க, கோவை இ.எஸ்.ஐ., சார்பு மண்டலம் சார்பில் துணை இயக்குனர் (பொறுப்பு) ரவிக்குமார், உதவி இயக்குனர் பெருமாள் ஆகியோர், உத்தரவு பிறப்பித்தனர்.
இதையடுத்து, பொள்ளாச்சி கிளை மேலாளர் ராஜேஸ்பாபு, ஒரு லட்சத்து, 18 ஆயிரத்து, 831 ரூபாய்க்கான காசோலையை மாசிலாமணியின் குடும்பத்தினரிடம் வழங்கினார். இ.எஸ்.ஐ., அலுவலர்கள் யோகஹரிஹரன், கிருஷ்ணவேணி ஆகியோர் உடனிருந்தனர்.