/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
/
கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
ADDED : செப் 20, 2024 10:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம் : கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி., புதூரில் மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா நடந்தது.
இந்நிகழ்ச்சியில், 45 மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு, 7 லட்சத்து, 34 ஆயிரத்து, 770 ரூபாய் தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கோவை அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் தலைவர் கன்னியப்பன், செயலாளர் ஹேமா, பொருளாளர் பழனிசாமி, கோவை ரோட்டரி கிளப் தலைவர் ஸ்ரீனிவாசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.