/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
/
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
ADDED : அக் 15, 2024 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார் : மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
சொக்கம்பாளையத்தில், செல்வ விநாயகர் கோவில் வளாகத்தில், ஸ்ரீ பளஞ்சிக கல்வி அறக்கட்டளை சார்பில், உதவி தொகை வழங்கும் விழா நடந்தது. இதில் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. புதிதாக நன்கொடை அளித்தவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
அறக்கட்டளை தலைவர் லோகநாதன் பேசுகையில், அறக்கட்டளையில் ஒரு கோடி ரூபாய் வங்கியில் வைப்பு தொகை வைக்கப்பட்டு, கடந்த 16 ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது, என்றார்.
விழாவில் அறக்கட்டளை செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் சுருதி ராஜேந்திரன் மற்றும் அறங்காவலர்கள் பங்கேற்றனர்.